#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Saturday 3 September 2016

கவியரசு கண்ணதாசன்



பெயர் - கண்ணதாசன்
இயற்பெயர் - முத்தையா
பிறப்பு - சூன் 24, 1927
பிறந்த இடம் - சிறுகூடல்பட்டி
 
புனைப்பெயர் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
தொழில் - கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்

குறிப்பிடத்தக்க விருதுகள்:

சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
(1961)
குழந்தைக்காக

சாகித்திய அகதமி விருது
(1980
சேரமான் காதலி)


வாழ்க்கைக் குறிப்பு:

தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன்.திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார்.

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

படைப்புகளில் சில:

   
இயேசு காவியம்
   
அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
   
திரைப்படப் பாடல்கள்
   
மாங்கனி

கவிதை நூல்கள்:

   
கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்
   
பாடிக்கொடுத்த மங்களங்கள்
   
கவிதாஞ்சலி
   
தாய்ப்பாவை
   
ஸ்ரீகிருஷ்ண கவசம்
   
அவளுக்கு ஒரு பாடல்
   
சுருதி சேராத ராகங்கள்
   
முற்றுப்பெறாத காவியங்கள்
   
பஜகோவிந்தம்
   
கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்