#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Friday 23 September 2016

சொல்

ஓரெழுத்துத் தனித்து நின்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருமாயின் அது சொல் என வழங்கப் பெறும்.


நின்றோ பொருள் தருமாயின் அது சொல் என வழங்கப் பெறும்.
சொல்லின் இரண்டு பிரிவுகள்
·  இலக்கண வகைச் சொற்கள்
·  இலக்கிய வகைச் சொற்கள்
இலக்கண வகைச் சொற்கள்
·  பெயர்ச்சொல்
·  வினைச் சொல்
·  இடைச்சொல்
·  உரிச்சொல்
இலக்கிய வகைச் சொற்கள்
·  இயற்சொல் 
(சோறு, கிளி - போன்ற யாவர்க்கும் புரிவன)
·  திரிசொல் 
(சொன்றி- கிள்ளை- போன்ற கற்றவர்க்கே புரிவன)
·  திசைச் சொல் 
(அல்வா, சன்னல் - போன்ற பிறமொழிச் சொற்கள்)
·  வடசொல் 
(பாவம், புண்ணியம், குங்குமம் போன்ற வடமொழிச் சொற்கள்)
இலக்கண வகையான நால்வகைச் சொற்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு :
ஆலயம் தொழுவது சாலவும் நன்று - ஒளவையார்
இச்செய்யுளில் நான்குவகைச் சொற்களும் உள்ளன.
ஆலயம் - பெயர்ச்சொல்
தொழு - வினைச்சொல்
சால - உரிச்சொல்
உம் - இடைச்சொல்
இவற்றை நினைவுபடுத்தி நெஞ்சகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்