#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Friday 23 September 2016

உவமைத் தொகை


 
உவமைத் தொகை என்பது, போல முதலிய உவமை உருபுகள் மறைந்து நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொல் தொடர்வதாகும்.
போல என்பதோடு புரைய, ஒப்ப, உறழ, அன்ன, இன்ன முதலியனவும் உவம உருபுகளாகும்.
(எ-டு.)  பவளவாய்
இது பவளம் போலும் வாய் என விரியும். இவற்றுள், பவளம் என்பது உவமானம்; போலும் என்பது உவமை உருபுவாய் என்பது உவமேயம். (உவமானம் - உவமையாகும் பொருள்உவமேயம் - உவமிக்கப்படும் பொருள்.)
இவ்வுவமைத் தொகை வினை, பயன், மெய், உரு என்பன பற்றி வரும். (மெய் - வடிவம்; உரு - வண்ணம்.)
(எ-டு.)
புலி மனிதன்-வினையுவமைத் தொகை
மழைக்கை-பயனுவமைத் தொகை
துடியிடை-மெய்யுவமைத் தொகை
பவளவாய்-உருவுவமைத் தொகை
இவை விரியும் பொழுது, புலி போலும் மனிதன், மழை போலும் கை, துடி போலும் இடை, பவளம் போலும் வாய் என விரியும்.