#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Friday 23 September 2016

வினைச் சொல்


வினைச் சொல்
ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
கற்றான், நிற்கிறாள், வருவார் முதலியன வினைச் சொற்கள் ஆகும். வினைச் சொல்லின் இலக்கணம் பின்வருமாறு.
1. வினைச்சொல் காலம் காட்டும்
2. வினைச்சொல் வேற்றுமையை ஏற்காது.
வினைச் சொற்கள் காலத்தைக் காட்டும் தன்மை கொண்டவை. காலம் மூன்று வகைப்படும்.
  1. இறந்தகாலம் - சென்றான், உண்டான், வந்தாள், படித்தார்.
  2. நிகழ்காலம்   - செல்கிறான், உண்கிறான், வருகின்றாள், படிக்கிறார்.
  3. எதிர்காலம்   - செல்வான், உண்பான், வருவாள், படிப்பார்.
மேலே காட்டிய வினைச் சொற்களுடன் வேற்றுமை உருபுகளைச் சேர்க்க முடியாது. எனவே, அவை வேற்றுமை உருபுகளை ஏற்காது என்பதை அறியலாம்.
வினைச் சொற்கள் எதிர் மறையாகவும் வரும்.
செல்லும்Xசெல்லாது
நிற்கும்Xநிற்காது
ஓடும்Xஓடாது
நடக்கும்Xநடக்காது
வினைச் சொற்களில் பல வகைகள் உள்ளன.
முற்று
முற்றுப் பெறுகின்ற வினை, முற்றுவினை எனப்படும்.
நான் நம்பியைப் பார்த்தேன்.
இதில் பார்த்தேன் என்னும் சொல்லில் பார்த்தல் என்னும் செயல் முற்றுப் பெற்றுள்ளது. எனவே இது முற்று வினை எனப்படும்.
எச்சம்
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினை, எச்ச வினை எனப்படும்
மணி வந்து போனான்.
மரத்திலிருந்து உதிர்ந்த பழம்.
இந்தத் தொடர்களில் உள்ள வந்து என்ற வினையும் உதிர்ந்த என்ற வினையும் முற்றுப் பெறாமல் உள்ளன. எனவே இவை எச்ச வினை எனப்படும். எச்ச வினை பெயரைக் கொண்டும் முடியும்; வினையைக் கொண்டும் முடியும். பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம்எனப்படும். வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம்எனப்படும்.
ஓடிய குதிரை. 
பாடிய
 பாட்டு. 
பாய்கின்ற 
வெள்ளம். 
பெய்யும்
 மழை.
இவை எல்லாம் பெயரைக் கொண்டு முடிவதால் பெயரெச்சம் எனப்படும்.
சென்று பேசினான். 
வந்து
 போனான். 
கற்றுத்
 தேர்ந்தான்.
இவை எல்லாம் வினையைக் கொண்டு முடிவதால் வினையெச்சம் எனப்படும்.