#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Friday 23 September 2016

எச்ச வினை


 
ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! ‘வந்தான்’ - ‘வந்து’ - ‘வந்த’ இம்மூன்று
 
‘வந்தான்’ என்பது, வினை, முற்றுப்பெற்றதை உணர்த்துகிறது. எனவே, இது வினைமுற்று..
 
‘வந்து’, ‘வந்த’ என்பன, முற்றுப்பெறாமல் உள்ளன. இவ்வாறு, பொருள் முடிவு தராமல் எஞ்சி நிற்பது எச்சம் - Participles or Infinitives எனப்படும். இவை, வேறு சொற்களைக் கொண்டு முடியும்.
 
திணை, பால், எண், இடம் ஆகிய விகுதிகளைப் பெறாமல், எச்ச விகுதிகளைப் பெற்றுவரும் வினைகள் எச்சவினை எனப்படும்.
 
வந்த, வருகின்ற, வரும்.
வர, போக, இருக்க.
வந்து, போய், இருந்து.
வந்தால், போனால், இருந்தால்.
 
போன்ற அமைப்பில் வரும் வினைகள் எச்சவினைகளாகும். இதனைப்
 
1. பெயரெச்சம், 2. வினையெச்சம் என இரண்டாகப் பகுக்கலாம்.
 
பெயரெச்சம்
 
‘வந்த’ என்பது சிறுவன், நாய் என ஏதேனும் ஒரு பெயரைக் கொண்டு பொருள் முடிவு பெறும். இவ்வாறு ஒரு பெயரைக் கொண்டு, முடியும் எச்சம் பெயரெச்சம் - Adjectival Participle எனப்படும்.
 
செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் அமைப்பினைக் கொண்டு இது வரும்.
 
செய்த வேலை, செய்கின்ற வேலை, செய்யும் தொழில்.
 
வினையெச்சம்
 
‘வந்து’ என்பது, சென்றாள், படித்தான், பார்த்தது என, வேறு வினையைப் பெற்றுப் பொருள் முடிவு பெறும். இவ்வாறு, வினையைக் கொண்டு பொருள் முடிவைப் பெறும் எச்சம் வினையெச்சம் - Adverbial Participle எனப்படும்.
 
1. செய்து, 2. செய்ய, 3. செய்தால் என்னும் அமைப்பைக் கொண்ட எச்ச வினைகளை வினை எச்சம் என்பர்.
 
1. செய்ய வேண்டும், தரச் சொன்னேன், போக விரும்பினேன்.
2. செய்து முடித்தேன், வந்து தருகிறேன், போய்ப் பார்க்கிறேன்.
3. செய்தால் தருவேன், போனால் வரமாட்டாய், இருந்தால் பார்க்கலாம்.