#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Wednesday 21 September 2016

ஆய்தக்குறுக்கம்


இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் இறுதியில் ல், ள் ஆகிய மெய் எழுத்துகள் வந்து இரண்டாம் சொல்லின் முதலில் தகர எழுத்து வந்தால் ல், ள் ஆகியவை ஆய்த எழுத்தாக மாறிவிடும்.

அல்
+
திணை
=
அஃறிணை
 முள்
+
தீது
=
முஃடீது


இந்த ஆய்த எழுத்து, குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும். இதையே ஆய்தக்குறுக்கம் என்று கூறுவர்.
, ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்
(நன்னூல் 97)
(பொருள்: ல், ள் ஆகிய எழுத்துகள் ஆய்த எழுத்தாகத் திரியும். அந்த ஆய்த எழுத்து, குறைந்து ஒலிக்கும். )
சார்பு எழுத்துகளுக்கு மாத்திரை
சார்பு எழுத்துகள் எல்லாம் எப்படி மாத்திரை பெறும் என்பதைப் பின்வரும் பட்டியல் காட்டும்.

உயிரளபெடை
மூன்று மாத்திரை
உயிர்மெய் நெடில்
இரண்டு மாத்திரை
உயிர்மெய்க் குறில்
ஒரு மாத்திரை
ஒற்றளபெடை
ஒரு மாத்திரை
ஐகாரக்குறுக்கம்,
ஒரு மாத்திரை
ஒளகாரக்குறுக்கம்
ஒரு மாத்திரை
குற்றியலுகரம், குற்றியலிகரம்
அரை மாத்திரை
ஆய்தம்
அரை மாத்திரை
மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்
கால் மாத்திரை