#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Friday 23 September 2016

ஒருமை

மொழி இலக்கணத்தில், எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கண வகைகளில் ஒன்று ஒருமை ஆகும். ஒருமை, ஒன்றைக் குறிக்கும்.கண் என்னும் சொல் ஒரு கண்ணைக் குறிப்பதால் இது ஒருமைச் சொல் எனப்படுகின்றது. தமிழ் மொழியில், பெயர்ச்சொல்,வினைச்சொல் இரண்டுமே எண் குறிப்பனவாக உள்ளன. பல மொழிகளில் ஒருமையுடன் பன்மை என்னும் பலவற்றைக் குறிக்கும் இன்னொரு எண் வகை காணப்பட, வேறு சில மொழிகளில் இரண்டைக் குறிக்கும் இருமை என்னும் எண்வகையும் உள்ளது.
ஒருமைப் பெயர்ச்சொற்கள்
கீழே தரப்பட்டிருப்பவை சில ஒருமைப் பெயர்ச்சொற்களாகும்.
·        பழம்
·        குடை
·        நிழல்
·        ஒலி
·        பறவை
ஒருமைப் பதிலிடு பெயர்கள்
தமிழில், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களில் உள்ள பதிலிடு பெயர்களின் ஒருமை வடிவங்களைக் கீழே காண்க.
·        நான் - (தன்மை)
·        நீ - (முன்னிலை)
·        அவன் - (படர்க்கை, ஆண்பால்)
·        அவள் - (படர்க்கை, பெண்பால்)
·        அது - (படர்க்கை, ஒன்றன்பால்)
ஒருமை வினைச்சொற்கள்  
செய் என்னும் வினைச்சொல் வேறுபாடுகளின் ஒருமை வடிவங்கள்.
-
பால்
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
தன்மை
-
செய்தேன்
செய்கிறேன்
செய்வேன்
முன்னிலை
-
செய்தாய்
செய்கிறாய்
செய்வாய்
படர்க்கை
ஆண்பால்
செய்தான்
செய்கிறான்
செய்வான்
பெண்பால்
செய்தாள்
செய்கிறாள்
செய்வாள்
ஒன்றன்பால்
செய்தது
செய்கிறது
செய்யும்