#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

பெரும்பொழுது


பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும்.ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சித்திரை, வைகாசி-இளவேனில் காலம்
ஆனி, ஆடி-முதுவேனில் காலம்
ஆவணி, புரட்டாசி-கார் காலம்
ஐப்பசி, கார்த்திகை-குளிர்காலம்
மார்கழி, தை-முன்பனிக் காலம்
மாசி, பங்குனி-பின்பனிக் காலம்
சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றை இவை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.
திணைபெரும்பொழுதுசிறுபொழுது
குறிஞ்சிகுளிர்காலம், முன்பனிக்காலம்யாமம்
முல்லைகார்காலம்மாலை
மருதம்ஆறு காலமும்வைகறை
நெய்தல்ஆறு காலமும்எற்பாடு
பாலைமுதுவேனில், பின்பனிநண்பகல்
ஒவ்வொரு நிலத்திற்கும் மேலே குறிப்பிட்ட காலங்கள்சிறந்தனவாக இருக்கும் என்பதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.