#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

உரிப்பொருள்

ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளை உரிப்பொருள் என்பர். உரிப்பொருள் திணைக்கு உரிய முக்கிய உணர்ச்சியைக் குறிக்கிறது. ஐந்து திணைகளுக்கும் உரிப்பொருள் பின்வருமாறு:
குறிஞ்சி-புணர்தல்-தலைவனும் தலைவியும் ஒன்று சேர்தல்.
முல்லை-இருத்தல்-தலைவி, பிரிவைப் பொறுத்துக் கொள்ளுதல்.
மருதம்-ஊடல்-தலைவனிடம் தலைவி பிணக்குக் கொள்ளுதல்.
நெய்தல்-இரங்கல்-தலைவி பிரிவுக் காலத்தில் வருந்துதல்.
பாலை-பிரிவு-தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல்.
இவ்வாறு எல்லாத் திணைக்கும் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் சொல்லப்பட்டிருக்கின்றன.